அமோனியா வாயு கசிவு எதிர்பாராத விபத்து – அமைச்சர் பர்வேஸ் விளக்கம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறி வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதனை குறித்து நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அம்மோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார். இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. அமோனியா கசிவு காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர். 70 பெண்கள், 4 ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த வடமாநிலத்தவர்களின் உடல்கள் தமிழக அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பர்வேஸ் கூறியுள்ளார்.

Related Stories: