கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

*அருவியில் குளித்து குதூகலம்

சேந்தமங்கலம் : கொல்லிமலைக்கு நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி பால்சில் குறைவாக கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Related Stories: