சென்னை: முதல்வர் விஜய்க்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
“உழைப்பால் உயர்ந்து நிற்கும் முதல்வர் விஜய்க்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் மக்கள் சக்தியால் மாபெரும் சக்தியாய் மாறி நிற்கிறார் முதல்வர் விஜய். இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வழியில் பயணிக்கும் அவரது நெடும் பயணம் தொடரட்டும்.
‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்ற வரிகள் நிஜமாகி கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இந்த அரசு இருக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைச்சரவையில் இஸ்லாமியர் இருவருக்கு இடமளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பூரண உடல் ஆரோக்கியத்துடன் நூறாண்டு வாழ்ந்து உங்கள் நல்லாட்சி தொடர வேண்டுமென புனித மக்காவில் இருந்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
