நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சு

சென்னை: “40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு மீறல். சட்டப்பேரவையில் தேசிய கீதம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் 2 முறை பாடப்பட்டிருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?. திமுகவின் கோரிக்கையை ஏற்று, மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தாமல் வழங்கியதற்கு நன்றி. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு பாராட்டு. நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்” என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.

Related Stories: