நாமக்கல், ஜூன் 22: நாமக்கல்லில் சர்வதேச யோகா தினம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட கல்வி அலுவலரும், நாமக்கல் மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலருமான உதயகுமார் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். பேராசிரியர்கள் உழவன் தங்கவேல், குரு, இங்கிலிஸ் அகாடமி தாளாளர் கௌரி, யோகா பேராசிரியர் சுப்பிரமணி, அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
- சர்வதேச யோகா தினம்
- நாமக்கல்
- மணவாளக்கலை மாந்தர் அறக்கட்டளை
- நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப் பள்ளி
