மல்லசமுத்திரம், ஜூன் 18: மல்லசமுத்திரம் அருகே, ஆத்துமேடு பஸ் ஸ்டாப்பில் தொட்டியப்பட்டி பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையில், பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்கிறது. இதில் ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் சென்றதால் அருகிலுள்ள தொட்டியப்பட்டி, முனியப்பம்பாளையம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றது. இதனால், தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
