மகளிர் தின கருத்தரங்கு

பரமக்குடி, மார்ச் 9:  பரமக்குடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கருத்தரங்கு நடைபெற்றது. பரமக்குடியில் மாவட்ட மக்கள் அமைப்பு சார்பாக அனைத்து மகளிர் குழுக்கள் இணைந்து மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ‘சமூக பொருளாதார அரசியலில் பெண்களின் தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக பெண்கள் கூட்டமைப்பின் தலைவி ராமலட்சுமி, பேரையூர் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் மாவட்ட மக்கள் அமைப்பின் பொருளாளர் ரூபி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட  குழந்தைகள் நல ஆணைய நிர்வாகி ஸ்டெல்லா முத்துச்சாமி முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் பவுலின் சகாய ராணி வரவேற்றார். கருத்தரங்கில் அரசியலில் இன்றைய பெண்களின் நிலை, அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவம்,பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புகளின் பெண்கள் பேசினர்.

இந்த கருத்தரங்கினை, ராமநாதபுரம் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்துகொண்டு சிலம்பு, பறை ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில், போகலூ,ர் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் .இறுதியில் அமைப்பின் பரமக்குடி ஒன்றியத்தின் துணைத்தலைவர்  ரெஜினா நன்றி கூறினார்.

Related Stories: