பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக இருந்து வருபவர் பலராமன், இதே அலுவலகத்தில் சிறப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் அமர்நாத். இவர்கள் இருவரும் அலுவலகப் பணி சம்பந்தமாக நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. தாசில்தார் பலராமனை ஜாதி பெயரை சொல்லி அமர்நாத் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பலராமனும், அமர்நாத்தும் ஒருவருக்கொருவர் அசிங்கமாக திட்டிக்கொண்டு கட்டி புரண்டு சண்டை போட்டு தாக்கிக் கொண்டனர். இதனால் அலுவலகத்தில் இருந்த லேப்டாப் போன்ற பொருட்கள் சேதமடைந்தது.
2 தாசில்தார்கள் கட்டி புரண்டு சண்டை
- தாஹ்சில்டார்கள்
- பண்ருட்டி
- பலராமன்
- வரி தண்டலர்
- பண்ருட்டி தாலுகா அலுவலகம்
- கடலூர் மாவட்டம்
- அமர்நாத்
- திட்டம்
- தாலுக் அலுவலகம்
