மல்லிகை பார்சலில் வெடி வெடித்து கல்லூரி மாணவி விரல் துண்டானது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மல்ராஜன் குப்பத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் மகள் ஜீவா (18). விழுப்புரம் அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் வளவனூர் கடைவீதியில் இறங்கி பூ பஜாரில் குண்டுமல்லி மற்றும் மல்லிகை பூ பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் பூவை கட்டுவதற்காக பார்சலை எடுத்தபோது, கீழே விழுந்து திடீரென பார்சலில் இருந்த வெடிமருந்து வெடித்து ஜீவாவின் வலது கால் சுண்டுவிரல் கிழிந்து துண்டானது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பூ தோட்டத்தில் வனவிலங்குகளை விரட்டுவதற்காக வைத்த வெடி மருந்து பூ பார்சலில் வந்திருக்கலாம். அது மாணவி வாங்கிய பார்சலில் இருந்து வெடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். எனினும் மாணவியை கொல்ல வெடி மருந்து அனுப்பினரா என்றும் விசாரணை நடக்கிறது.

Related Stories: