சென்னை: தமிழக அரசின் தொழில் துறை முதலீட்டு ஊக்குவிப்பு செயலராக விவேகானந்தனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக பணிபுரிந்து வந்த விவேகானந்தன் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு சிறப்பு செயலாளராகவும், சேலம் பட்டுவளர்ப்புத் துறை இயக்குநராக பணிபுரிந்து வந்த சாந்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இயக்குநராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இயக்குநராக இருந்து வந்த மெர்சி ரம்யா தமிழ்நாடு மின் விநியோக நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
