‘ஆகாஷ் உடலுக்கு அரசு இறுதிச்சடங்கு செய்யணும்’

மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வாலிபர் ஆகாஷை, போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தபோது காலில் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையின்போது அடித்துக் கொன்றதாக கூறி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிய கோரி ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆகாஷ் உடலை குடும்பத்தினர் பெறவில்லை.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘‘இறப்புக்கு பின்பும் மனித கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். மதுரை கலெக்டர், மாநகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆகாஷின் உடலுக்கு சட்டப்படி உடனே இறுதிச்சடங்கு நடத்த வேண்டும். இதனால், சிபிசிஐடி விசாரணை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. சட்டப்படி விரைவாக விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: