காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தத்தனூர் பகுதியில் முருகன் என்பவர் வீட்டில் ஏற்பட்ட தீ பரவி சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேல் தளத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டில் ஏற்பட்ட தீயானது பரவி வீட்டின் கீழ் தளத்திற்கும் பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க உதவிய சைமன், விக்னேஷ், சரத், செல்வராஜ், திலகர் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
