கரூர்: குளித்தலையில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பயணி உயிரிழந்தார். பேருந்தின் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த மாலதி(45) உயிரிழப்பு. மேலகுறைப்பாளையம் என்ற இடத்தில் பேருந்து அதிவேகமாக வளைவில் திரும்பியபோது மாலதி கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மாலதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
