சென்னை: தமிழகம் முழுவதும் 17 மாவட்ட எஸ்பிக்கள் உள்பட 56 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா சென்னை மாநகர தலைமையிட டிஐஜியாகவும், சென்னை மாநகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த பல்லா கிருஷ்ணன் சென்னை சைபர் க்ரைம் துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு-1 துணை கமிஷனராக இருந்த செல்வராஜ் சென்னை மாநகர உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு-3 துணை கமிஷனராக இருந்த ஆரோக்கியம், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய எஸ்பியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனராக இருந்த வனிதா ஆவடி மாநகர தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த குமார் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தலைமை பாதுகாப்பு அதிகாரியாவும், சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக இருந்த முத்துகுமார் சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோபி சென்னை பூக்கடை துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் இயேசுபாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு-3 துணை கமிஷனராகவும், சென்னை தலைமையிட மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக இருந்த சுஜாதா சென்னை மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனராகவும், சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த குத்தாலிங்கம் சேலம் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை அடையாறு துணை கமிஷனராக இருந்த கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும், தாம்பரம் மாநகரம் பள்ளிக்கரணை துணை கமிஷனராக இருந்த பொன் கார்த்திக் குமார் திருச்சி மாநகர தலைமையிட துணை கமிஷனராகவும், ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும் மாற்றப்பட்டனர்.
ஆவடி மாநகர செங்குன்றம் துணை கமிஷனராக இருந்த பாலாஜி சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விவேகானந்தா சுக்லா கடலூர் மாவட்ட எஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக இருந்த வி.வி.சாய் பிரனீத் திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாகவும், கடலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் திண்டுக்கல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை எஸ்பியாக இருந்த சுதாகர் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பியாகவும், மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த மதிவாணன் விழுப்புரம் எஸ்பியாகவும், சேலம் மாவட்ட எஸ்பியாக இருந்த கவுதம் கோயல் விருதுநகர் எஸ்பியாகவும், நாமக்கல் எஸ்பியாக இருந்த விமலா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பியாகவும், காவல்துறை தலைமையிட எஸ்பியாக இருந்த அருண் கபிலன் தர்மபுரி மாவட்ட எஸ்பியாகவும், தர்மபுரி எஸ்பியாக இருந்த மகேஸ்வரன் கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு எஸ்பியாக இருந்த அனிதா கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த தங்கதுரை கோவை மாநகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருப்பூர் மாவட்ட எஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் நாமக்கல் மாவட்ட எஸ்பியாகவும், திருப்பூர் மாநகர மேற்கு துணை கமிஷனராக இருந்த தீபா சத்யன் சென்னை மாநில மனித உரிமை ஆணையம் எஸ்பியாகவும், கோவை மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த தேவநாதன் மதுரை மாவட்ட எஸ்பியாகவும், மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த அரவிந்த் க்யூ பிரிவு சிஐடி எஸ்பியாகவும், சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த கேல்கர் சுப்ரமண்யா பாலச்சந்திரா நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாகவும், திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் தேனி மாவட்ட எஸ்பியாகவும், அரியலூர் எஸ்பியாக இருந்த விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி திருநெல்வேலி எஸ்பியாகவும், நாகப்பட்டினம் எஸ்பியாக இருந்த சுஜித் குமார் சென்னை சைபர் க்ரைம் பிரிவு-3 எஸ்பியாகவும், தேனி எஸ்பியாக இருந்த புக்ய சினேக பிரியா மயிலாடுதுறை எஸ்பியாகவும், திருச்சி மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த செந்தில்குமார் சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த சிருஷ்டி சிங் திருப்பூர் எஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக இருந்த ஸ்ரீநாதா காவல்துறை தலைமையிட உதவி ஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த பிரதீப் காவல்துறை சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை கமிஷனராக இருந்த வினோத் சாந்தாரம் ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், திருநெல்வேலி மாநகர மேற்கு துணை கமிஷனராக இருந்த விஜயகுமார் ஆவடி ரெஜிமென்டல் சென்டர், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு கமாண்டன்டாகவும், வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த செல்வகுமார் அரியலூர் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக இருந்த எஸ்பி நாகஜோதி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும், சென்னை சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருந்த மகேந்திரன் சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராகவும், சென்னை மத்திய சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இருந்த மணிகண்டன் திருச்சி மாநகர தெற்கு துணை கமிஷனராகவும், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு எஸ்பியாக இருந்த மீனா சென்னை மத்திய சரக லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக இருந்த ஜோஷ் தங்கையா ராமநாதபுரம் சக்கரக்கோடடையில் உள்ள தமிழ்நாடு 12வது சிறப்பு காவல்படை கமாண்டன்டாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சக்திவேல் சென்னை சைபர் க்ரைம் பிரிவு-2 எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜேஷ் கண்ணன் சென்னை கொளத்தூர் துணை கமிஷனராகவும், சென்னை கொளத்தூர் துணை கமிஷனராக இருந்த குமார் சென்னை தி.நகர் துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜவஹர் சென்னை மெட்ரோ மண்டல சிபிசிஐடி எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வநாகரத்தினம் சென்னை சைபர் க்ரைம் பிரிவு -1 எஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபாகர் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை கமிஷனராகவும், தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த சமய் சிங் மீனா சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
