பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி சென்னை இன்ஜினியர் உள்பட 3 பேர் பலி

பாடாலூர்: சென்னை பெரம்பூர் பாரதிநகரை சேர்ந்த வேலு மகன் சங்கர் (37). அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் விஜய் (30). இன்ஜினியரான இருவரும், தமிழகம் முழுவதும் கம்பெனிகளில் டீ சர்ட் பிரிண்டிங் மெஷின் பழுது நீக்கும் வேலை பார்த்து வந்தனர். கேரளாவில் உள்ள ஒரு பேக்டரிக்கு டீ சர்ட் பிரிண்டிங் மெஷின் பழுது பார்ப்பதற்காக இருவரும் காரில் சென்று இருந்தனர்.

பணி முடிந்து இருவரும் திருச்சி மாவட்டம் துறையூர் வழியாக நேற்று அரியலூர் திரும்பினர். காரை அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூரை சேர்ந்த மருதமுத்து மகன் சக்தி (21) ஓட்டினார். காலை 6 மணி அளவில் பெரம்பலூர் அருகே ஆலத்தூர் தாலுகா அடைக்கப்பட்டி டி.களத்தூர் பிரிவு ரோட்டில் வந்தபோது எதிரே பெரம்பலூரில் இருந்து இரும்பு ஏற்றி கொண்டு திருச்சி மாவட்டம் துறையூர் சென்ற லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கி டிரைவர் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

Related Stories: