ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கடந்த பிப். 23ல் டேவிட் என்பவரின் விசைப்படகில் மீனவர்கள் கபில் ரோச்சர், ஜான்சன் உள்ளிட்ட 12 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர், அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
