மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

 

அவிநாசி, ஜூன் 15: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கம் வென்ற அவிநாசி அரசு பள்ளி மாணவர் சபரி ஆனந்துக்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டுக்களை தெரிவித்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், கடந்த 8 முதல் 10ம் தேதி வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 26வது நீச்சல் போட்டியில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர் சபரி ஆனந்த் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவரை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

 

Related Stories: