திருப்பூர், ஜூன் 15: திராவிட ஜின்னிங், டையிங் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதனால், தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே, பிரிண்டர்களுக்கு ரூ.1000 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.900 வழங்க வேண்டும். மேலும், 20 நாட்களுக்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
அதே போல் தொழிலாளிகளுக்கு கட்டாயமாக ஜாப்கார்டு வழங்க வேண்டும். அதே போல் அனைத்து பிரிண்டிங் துறையில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கும் தேவையான சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
