மீன் வளர்ப்பு கருத்தரங்கு

தா.பழூர், மார்ச் 7: தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், அரியலூர் மாவட்ட நபார்டு வங்கி இணைந்து மீன்வள கருத்தரங்கு நடத்தியது. கிரீடு வேளாண் அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகு கண்ணன் வரவேற்றார். நாகை மீன் பல்கலைக்கழகம் இயக்குனர் முனைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மேலும் நபார்டு வங்கி மேலாளர் நவீன் குமார் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்தரங்கின் நோக்கம் பற்றி உரையாற்றினார். நாகப்பட்டினம் வேளாண் அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி கோபால கண்ணன், தொழில்நுட்ப வல்லுனர் ஹினோ பெர்னான்டோ மீன் வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.மேலும் மீன் வளர்ப்பில் வெற்றி பெற்ற விவசாயிகள் மீன் வளர்ப்பின் அனுபவங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

Related Stories: