அதிகரிக்கும் மின்வெட்டால் மக்கள் அவதியுற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: அதிகரிக்கும் மின்வெட்டால் மக்கள் அவதியுற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்தடை குறித்து ஒரே புகாராக வருகிறது. மின்தடை பற்றி பொதுமக்களிடம் கூறுவதற்கு காரணங்களைத் தேடி நேரத்தை செலவழிக்க வேண்டாம். மின்தடையால் வீடுகள், சிறு தொழில்கள், விவசாயம், மாணவர்களின் படிப்பு என அனைத்தும் பாதிப்பு அடைகிறது. மின்சாரம் என்பது வெறும் ஒரு வசதி மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: