பிளஸ்2 மாணவியை கடத்தி பலாத்காரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில், 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். இந்த சிறுமிக்கு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன்(28) என்பவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவியை நேரில் பார்க்க விரும்புவதாக கருப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 8ம் தேதி மெட்டாலாவுக்கு வந்த கருப்பன், பள்ளிக்கு சென்ற மாணவியை, திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக்காட்டுவதாக கூறி, தனது டூவீலரில் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர், வீடு திரும்பி வந்த மாணவி சோர்வாக இருப்பதை கண்டு அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை பலாத்காரம் செய்த கருப்பனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை;
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 11 மற்றும் 9 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறுமிகளின் தந்தை பிரிந்து தனியாக சென்றுவிட்டார். சிறுமிகள் இருவரும் தாயின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். சிறுமிகள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபின் அவர்களிடம் தாயின் 2வது கணவரும், சிறுமிகளின் வளர்ப்பு தந்தையுமான டிரைவர் சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் தனது தாயிடம் சிறுமிகள் தெரிவித்தனர். ஆனால், கண்டிக்க வேண்டிய தாய், ‘‘அப்பா உங்களிடம் சும்மா விளையாடுகிறார். இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது’’ என கூறியதாக தெரிகிறது. இதனால், சிறுமிகள் செய்வதறியாது தவித்து வந்தனர். ஆனால், வளர்ப்பு தந்தையின் பாலியல் தொல்லைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்ததால் சிறுமிகள் தங்களது பெரியம்மாவிடம் கூறி அழுதனர். அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து உறவினர்களுடன் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வளர்ப்பு தந்தையையும், மகள்களுக்கு நடந்த கொடுமைகளை தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்த தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை;
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி விடுமுறை நாட்களில் தனது பாட்டியின் வீட்டின் அருகே விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, 6 சிறுவர்களுடன் பிரி ஃபயர் கேம் விளையாடும்போது, மாணவன் வெற்றி பெற்றதால், மற்ற 6 பேரும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 6 சிறுவர்களும் அப்பகுதியை சேர்ந்த பிரசாத் (23), விக்னேஷ் (26) ஆகியோரிடம் சென்று, அந்த மாணவன் உங்களைப் பற்றி தவறாக பேசுவதாக அவதூறு கூறியுள்ளனர். இதனால் பிரசாத், விக்னேஷ், 6 சிறுவர்களுடன் சேர்ந்து மாணவனை கல்லால் தாக்கினர். மேலும் பிரசாத் மற்றும் விக்னேஷ் இருவரும் சேர்ந்து அந்த மாணவனை, அங்குள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் போலீசார் பிரசாத், விக்னேஷ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: