பெரம்பூர்: கொடுங்கையூர் என்.வி நடராஜன் தெருவை சேர்ந்தவர் அருள் நெல்சன் (29), கார் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 2வது பிளாக் அருகே ஆட்டோவில் வந்த விஷால், பரத் ஆகியோர், இவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்ட முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருள் நெல்சன் கத்தியை பறித்து இருவரையும் வெட்டினார்.
இதில், காயமடைந்த விஷால், பரத் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, அருள் நெல்சனை பிடித்து விசாரித்தனர். அதில், அருள் நெல்சனின் நண்பர் ஸ்ரீநாத் என்பவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கேட்க அருள் நெல்சன் சென்றுள்ளார். இந்த முன்விரோதத்தில் அருள் நெல்சனை வெட்ட முயன்றபோது, கத்தியை பறித்து இருவரையும் வெட்டியது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்தனர்.
