அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் சமீபகாலமாக வழிப்பறி, திருட்டுகள் மற்றும் அடிதடி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார், டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று நடைபெற்ற கண்காணிப்பு பணியின் போது, அடிதடி வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த 2 பேர், போலீசாரின் டிரோன் கேமராவில் சிக்கினர். அவர்களை, சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசாரின் இந்த டிரோன் கண்காணிப்பு நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
