தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த் பாபு (26). இவர் நேற்று கொருக்குப்பேட்டை மோட்சபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர், ஆனந்த் பாபுவை கத்தியால் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆனந்த்பாபுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆனந்த்பாபு ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கத்தியால் வெட்டி, பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
