பாளை வேல்ஸ் பள்ளியில் மகளிர் தின விழா முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் பங்கேற்பு

நெல்லை, மார்ச் 7:  பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கினார். பாளை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆண்டுதோறும் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான உலக மகளிர் தின விழா  விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் எம்.பி.யும், அதிமுக மகளிர் அணி மாநில செயலாளருமான விஜிலா  சத்யானந்த், விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசினார்.

பள்ளி முதல்வர் சுகந்தி சொர்ணலதா, துணை முதல்வர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதையடுத்து மகளிருக்கான பல்வேறு போட்டிகளை பள்ளி இயக்குநர் திலகவதி துவக்கிவைத்தார். இதில் சமையல், ரங்கோலி, பாட்டு, நடனம், கயிறு இழுத்தல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட  பல்வேறு போட்டிகளில் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விஜிலா சத்யானந்த் சான்று மற்றும் சிறப்பு பரிசுகள்  வழங்கிப் பேசுகையில், ‘‘வீட்டிற்கும், நாட்டிற்கும் கண்களாகத் திகழும் பெண்கள், இனி வரும்காலங்களிலும் அனைத்துத் துறைகளில் முன்னிலை வகித்து சாதனை படைக்க வேண்டும்’’ என்றார்.

 ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் செல்வராஜ் செய்திருந்தார்.

Related Stories: