பாட்னா: பீகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பிரசாத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) இந்த தீவிபத்து ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்வதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
