பள்ளிக்கரணை ஏரியில் முதியவர் நீரில் மூழ்கி பலி

வேளச்சேரி, மே 25: வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி(67). இவர் கட்டிட தொழிலாளி. நேற்று மாலை இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தனது நண்பர்கள் 4 பேருடன் பள்ளிக்கரணை அணை ஏரிக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சக்கரபாணி சில தூரம் சென்றவர் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

இதில் இவருடன் கூட வந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு மணிநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் ஏரியில் மிதந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார். உடனடியாக பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: