புதுடெல்லி:வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் திறன் கொண்டது. ருத்ரா எம்-2 ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
சுகோய் போர் விமானத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், ‘ருத்ரா’ எம்-2 ஏவுகணை தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வானத்திலிருந்து தரைப்பகுதி, கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள், தகவல் தொடர்புத் தளவாடங்களை தொலைவிலிருந்தே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
