வத்திராயிருப்பில் பதற்றமான 6 வாக்குச்சாவடி

கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு

வத்திராயிருப்பு, மார்ச் 5: வத்திராயிருப்பு தாலுகாவில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வத்திராயிருப்பு தாலுகாவில் 146 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் வத்திராயிருப்பு தாலுகாவில் கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 14,15 ஆகிய வாக்குச்சாவடிகள், வ.புதுப்பட்டியில் ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் 72வது வாக்குச்சாவடி, இதே ஊரில் அருளப்பர் தொடக்கப்பள்ளியில் 74வது வாக்குச்சாவடி, சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 86வது வாக்கு

ச்சாவடி, நத்தம்பட்டி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் 111 வது வாக்குச்சாவடி ஆகியவை பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>