ஒரு மாநிலங்களவை பதவிக்கான இடைத்தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

 

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் நாளை முதல் ஜூன் 8ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும், ஜூன் 11ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும்

Related Stories: