சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை: போலீசார் விசாரணை

 

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை செய்துள்ளனர். தனியார் மதுபான பாரில் நடனமாடுவதில் யான்சி (18) என்பவர் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் யான்சி சென்ற இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றியுள்ளார். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Related Stories: