டவுன் நெல்லையப்பர் கோயிலில் ரூ.28.64 லட்சம் உண்டியல் வசூல்

 

நெல்லை, மே 28: தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆனித்ேதரோட்டம், ஐப்பசி திருக்கல்யாணம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தினமும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என திரளானவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல் காணிக்கை மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று காலை சுவாமி , அம்பாள், ஆறுமுகர் சன்னதிகள் உள்ளிட்ட 22 நிரந்தர உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடந்தது.

அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, அறங்காவலர் சோனா, வெங்கடாசலம், கீதாபழனி, செயல்அலுவலர் வெங்கேடசன், கண்காணிப்பாளர் முருகன், அறநிலையத்துறை ஆய்வாளர் தனலெட்சுமி என்ற வள்ளி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள், உழவாரப் பணிக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை தொடங்கிய உண்டியல்களை திறந்து எண்ணும் பணி மாலை வரை நீடித்தது. இதில் 28 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரூபாய் ரொக்கப்பணத்தை பக்தர்கள் காணிக்கையாக ெசலுத்தியிருந்தனர். இதேபோல் உண்டியல்கள் மூலம் 29 கிராம் 200 மில்லிகிராம் தங்கம், 927 கிராம் 400 மில்லிகிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. அத்துடன் வெளிநாட்டு பணம் 16 தாள்கள் வருவாயாகக் கிடைத்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 23 லட்சத்து 47 ஆயிரத்து 66 ரூபாய் வசூலாகி இருந்தது. கடந்த ஜனவரி மாதம் கிடைத்த உண்டியல் காணிக்கை வசூலைவிட தற்போது 5 லட்சத்து 17ஆயிரத்து 511 ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Stories: