நெல்லையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் பறிப்பு

 

நெல்லை, மே 28: நெல்லை சந்திப்பில் இருந்து சேந்திமங்கலத்திற்கு பஸ்சில் வந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருடிச்சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை உடையார்பட்டி அடுத்த சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நயினாரின் மனைவி ஆறுமுகத்தம்மாள் (62). இவர் நேற்று நெல்ைல சந்திப்பில் இருந்து அனந்த கிருஷ்ணாபுரம் செல்லும் பஸ்சில் ஏறி சேந்திமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கொண்டுசென்ற துணிப்பையில் மொத்தம் 3 பவுன் மதிப்பிலான 2 வளையல்களை வைத்திருந்தார்.

பஸ்சில் இருந்து இறங்கிய பிறகு வளையல்களை தேடி பார்த்தபோது, துணிப்பையில் இருந்த தங்க வளையல்களை காணவில்லை. இந்நகையை ஓடும் பஸ்சில் நோட்டமிட்டு மர்மநபர் திருடிச்சென்றது தெரிய வந்ததும் பதறிய மூதாட்டி பின்னர் இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூதாட்டியிடம் ஓடும் பஸ்சில் நகை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: