பேராவூரணி பேரூராட்சி எச்சரிக்கை தேசிய அறிவியல் நாள் விருதுகள் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை வழங்கியது

தஞ்சை, மார்ச் 4: தேசிய அறிவியல் நாளையொட்டி சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெண் விஞ்ஞானிகளையும், அறிவியலாளர்களையும் தெரிவு செய்து கவுரவிக்கிறது என மத்திய அறிவியல், தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில் நுட்பதுறைச் செயலர் ரேணு ஸ்வருப் தெரிவித்தார். தஞ்சை சாஸ்த்ராவில் தேசிய அறிவியல் நாளையொட்டி சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா இணையவழியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பேசிய டாக்டர் ரேணு ஸ்வருப், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திறன்களை வளர்ப்பதிலும், இளம் மாணவர்களை அறிவியல் துறையில் ஈடுபடுத்துவதிலும் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன என்றார்.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் தனது வரவேற்புரையில், அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை போற்றும் மரபை சாஸ்த்ரா தொடர்ந்து பேணி வருகிறது என்றார். இதில் புதுடெல்லி ஐ.ஐ.டி முன்னாள் பேராசிரியர் அஜோய் கதக்குக்கு சாஸ்த்ரா ஜி.என்.ராமச்சந்திரன் விருது, தில்லி தேசிய தாவர மரபணு நிறுவனத்தை சேர்ந்த கீதாஞ்சலி யாதவுக்கு சாஸ்த்ரா ஒபைத்சித்திக் விருது வழங்கப்பட்டது.

மேலும் 2021ம் ஆண்டில் வேதியியல், பொருள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக தில்லி ஐ-.ஐ.டி பேராசிரியர் ஏ.கே.கங்குலிக்கும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனப் பேராசிரியர் ஜி.முகேசுக்கும் இணைந்து சாஸ்த்ரா&சி.என்.ஆர்.ராவ் விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகளுடன் தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

நிகழாண்டு முனைவர் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு, நான்காமாண்டு படிக்கும் கான்பூர் ஐ.ஐ.டியை சேர்ந்த மது சதுர்வேதி, நிஷாந்த் மன்சர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சயன்தாசி சின்ஹா ஆகியோருக்கு விருது, தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் சாஸ்த்ராவை சேர்ந்த ரம்யா கான்பூர் ஐ.ஐ.டியை சேர்ந்த அகன்ஷா ஓங்கரை கவுரவப்படுத்தும் வகையில் தலா ரூ.50,000 ரொக்கப்பரிசும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரூஹி மொஹிதீனுக்கு சிறப்புப் பரிசாக ரூ.25,000ம் வழங்கப்பட்டது. பின்னர் சாஸ்த்ராவில் உயிரி தொழில்நுட்பத்துறையில் ரூ.7 கோடி நிதியுதவியுடன் தொழில் நுட்ப வணிக வளர்ப்பகமான அப்லெஸ்ட் என்கிற அமைப்பை ரேணு ஸ்வரூப் திறந்து வைத்தார். முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Related Stories: