சிவகாசி, மே 26: திருத்தங்கல் தனியார் பள்ளியின் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பொன்னுமணி(20), பொன்இருளப்பன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது பொன்இருளப்பன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பொன்னுமணியை போலீசார் கைது செய்தனர்.
