திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவன் பார்வதி ஆலய பிரகார வீதியுலா மீண்டும் செயல்படுத்த வேண்டும்

 

கொள்ளிடம், மே 26: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் புகழ்பெற்ற பிரகன்நாயகி உடனாகிய சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சுவாமி அருள் பாலித்து வருகிறார். பாலமுருகன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் பிரதோஷ விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இக்கோயிலில் பிரதோஷ விழா நாளில் பிரதோஷ மூர்த்தியாகிய சிவன்,பார்வதி ஆலய பிரகார புறப்பாடு காலம் காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு முறையாகும்.

Related Stories: