தேன்கனிக்கோட்டை, மே 25: தேன்கனிக்கோட்டை சந்தை மேட்டு தெருவை சேர்ந்தவர் சந்திரன்(49). இவரது மகள் வித்யாஸ்ரீ (20). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை, கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், சந்திரன் தேன்கணிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
