ராயக்கோட்டை, மே 23: ராயக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 2 மடங்கு விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடும் வெயிலின் காரணமாக பூக்கள், காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஒரு மாதமாகவே, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் கிலோ ரூ.40 முதல் 50 வரை கொள்முதல் செய்த பீன்ஸ், கடந்த சில நாட்களாக ரூ.100க்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகிறது.
அதை சில்லறை வியாபாரிகள் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்கின்றனர். அதே போல், கிலோ ரூ.10க்கு கூட விற்பனையாகாத கத்திரிக்காய் தற்போது ரூ.20க்கும், வெண்டைக்காய் ரூ.15, ரூ.40க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.65க்கும், முள்ளங்கி ரூ.20, பச்சை மிளகாய் ரூ.40, பாகற்காய் ரூ.45, பீர்க்கங்காய் ரூ.30, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ.50, ரூ.15க்கு விற்பனையான முட்டைக்கோஸ் ரூ.35, காலிப்பிளவர் ரூ.30, தேங்காய் ஒன்று ரூ.65 என இரு மடங்கு விலை அதிகரித்து விற்பனையாகிறது.
