ஆற்று மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

போச்சம்பள்ளி, மே 25: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகில் உள்ள பெனுகொண்டாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், லாரியை சோதனை செய்தனர். அந்த சமயத்தில் டிரைவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பினார். டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் மற்றும் லாரியின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: