சேத்தமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தேசிய பறவை உயிரிழப்பு

 

திருவாரூர், மே 25: சேத்தமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் சேந்தமங்கலம் என்கிற இடத்தில் மயில் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிருக்கு போராடிய நிலையில் நடு சாலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மயிலை மீட்டு சாலை ஓரத்தில் வைத்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அந்த மயில் பரிதாபமாக செத்தது.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து திருவாரூர் மாவட்ட வன அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் ரஞ்சித்குமார், வனவர் சீனிவாசன், வனக்காப்பாளர் துர்கா ஆகியோரின் வழிகாட்டுதல்படி வன காவலர் குமார் நிகழ்விடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவாரூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். இது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: