நீடாமங்கலம், மே 25: நீடாமங்கலம் அருகே உள்ள வெள்ளங்குழி காமாட்சி அம்மன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி வெள்ளங்குழி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் 27ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 18ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 22, 23ம் தேதி ஆகிய இரு தினங்கள் மாலை அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் அம்மனுக்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் கஞ்சி வார்த்தை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை அம்மனுக்கு கரகம் எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி மாவிளக்கு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
