சட்டநாதபுரம் சுடுகாடு கொட்டகை அருகே விளக்குடன் கூடிய மின் கம்பம் மாயம்

 

சீர்காழி, மே 25: சீர்காழி அருகே சுடுகாடு கொட்டகை அருகே பயன்பாட்டில் இருந்த விளக்கு மின்கம்பத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளதால் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரையில் சுடுகாடு கொட்டகை அமைந்துள்ளது. இந்த சுடுகாடு பொட்டகையில் சட்டநாதபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். சுடுகாட்டிற்கு செல்லும் சாலையில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மின்விளக்குகள் எரிந்து வந்தன. இதனால் சுடுகாட்டிற்கு இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.

Related Stories: