கீவ்: ரஷ்யாவின் மற்றொரு முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்யாவிற்குள் 800கி.மீக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள சிஸ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் கருப்புப் புகை வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரிகின்றது. ரஷ்யாவின் சமாரா பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் சிஸ்ரானில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர் சுத்திகரிப்பு நிலையத்தை குறிப்பிடவில்லை.
