டொரோண்டோ: மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் காங்கோவில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் காங்கோ உள்பட சில ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டுமென்றால் வாஷிங்டன் விமான நிலையத்தின் வழியாகவே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு இன்று ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் காங்கோ நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் இருந்துள்ளார். காங்கோவை சேர்ந்தவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்ற காங்கோ நாட்டினர் வாஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவுக்குள் நுழைய முடியும் என்ற விதியுள்ளது.
இதனால், ஏர் பிரான்ஸ் விமானம் மிச்சிகன் மாகாணத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த விமானம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய பின் காங்கோ நாட்டை சேர்ந்த பயணிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த பயணியை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அதே விமானத்தில் பயணித்த பிற பயணிகள் அனைவரும் அமெரிக்காவில் உள்ள மிக்ஸனுக்கு புறப்பட்டு சென்றனர்.
