×

உக்ரைனுக்கு ரூ.1032 கோடி ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்க அரசு ஒப்புதல்

 

கீவ்: உக்ரைனுக்கு ரூ.1032 கோடி மதிப்புள்ள ஹாக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான தொடர் சண்டையில், ரஷ்யாவின் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை தொடங்கி உள்ளது இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனின் வான் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ரூ.1032 கோடியிலான ஹாக் ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு டிரம்ப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஹாக் அமைப்பு என்பது, ஏவுகணையின் வகையைப் பொறுத்து 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் விமானங்கள், டிரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். ரஷ்யத் தாக்குதலை சமாளிக்க, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உக்ரைன் ஏராளமான ஆயுதங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ukraine ,US government ,Kiev ,US ,President ,Trump ,Russia ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி