×

5000 வீரர்களை போலந்து அனுப்பிய அதிபர் டிரம்ப்: நேட்டோ நாடுகள் அதிர்ச்சி

 

ஹெல்சிங்போர்க்: அமெரிக்க வீரர்கள் 5ஆயிரம் பேரை போலந்து அனுப்புவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவினால் நேட்டோ நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பாவில் இருந்து 5000 அமெரிக்க வீரர்கள் திரும்ப பெறுவதற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சில வாரங்களிலேயே 5000 வீரர்களை போலந்துக்கு அனுப்புவதற்கு அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், அமெரிக்கா கூடுதலாக 5000 வீரர்களை போலந்துக்கு அனுப்ப இருக்கிறது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிபிட்டுள்ளார்.

இது குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நேட்டோ நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து ஸ்வீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மரியா மால்மர் ஸ்டெனெர்கார்ட் கூறுகையில், இது உண்மையில் குழப்பமாக இருக்கிறது. இதனை எப்படி அணுகுவது என்பதும் எப்போதும் எளிதாக இருப்பதில்லை. முதல் அறிவிப்புக்கு எதிர்வினையாற்றுவதற்கே நாங்கள் கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பகுதியை கழித்தோம். இந்த புதிய அறிவிப்பு எதனை குறிக்கிறது என்பதும் எங்களுக்கே தெரியவில்லை என்றார்.

Tags : President Trump ,Poland ,NATO ,Helsingborg ,US ,President Donald Trump ,Europe ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை: 2 இந்திய வீரர்கள் பலி