சென்னை: திருவொற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு என புகார் அளித்துள்ளனர். மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் பேச மறுப்பதாக மக்கள் வேதனை தெரிவித்த நிலையில், இது தொடர்பாக மின்விநியோக பாதிப்பை சரிசெய்யக் கோரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
