சேலம், மே 20: சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்த நிலையில், தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வர் ஆகியுள்ளார். இந்நிலையில் சேலம் மாநகரில் இருந்து தினந்தோறும் தவெகவுக்கு அதிமுகவினர் செல்கின்றனர். அதன்படி அம்மாபேட்டை மாஜி பகுதி செயலாளர் ஜெகதீஸ்குமார், அதிமுக 6வது வட்டசெயலாளர் குரு (எ) குபேந்திரன், 8வது வட்ட செயலாளர் நாகராஜ், ஜெ.பேரவை துணைத்தலைவர் ஜானகிராமன், இளைஞரணி இணை செயலாளர் கவுரிசங்கர், 27வது வட்ட மாஜி செயலாளர் பாலாஜி, 28வது வார்டு மாணவரணி பொருளாளர் முத்துகிருஷ்ணன்,
40வது வட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இளைஞர் பாசறை இணை செயலாளர் முரளி, சிறுபான்மை பிரிவு துணை செயலாளர்கள் அப்துல்காதர், அம்ஜத்கான், 58வது வட்ட கிளை செயலாளர் சக்தி உள்ளிட்டோர் ஒரே நாளில் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளனர். அதேபோல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், தவெக மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் எம்எல்ஏ முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். சேலம் மாநகரில் இருந்து தொடர்ந்து அதிமுகவினர் விலகி வருவது, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
