முன்விரோத தகராறில் இருதரப்பினர் மோதல்

 

தாரமங்கலம், மே 19: தாரமங்கலம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஓடைவிநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கலா(45). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும், கடந்த இரண்டு வருடங்களாக வழிப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் மேட்டூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், முத்துசாமி தரப்பினர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து, காபி பார் ஷோகேஸ் மற்றும் அடுப்பு ஆகியவற்றை வைத்துள்ளதாக கூறி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

இதில் படுகாயமடைந்த இருதரப்பை சேர்ந்தவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி கலா கொடுத்த புகாரின் பேரில் குமார், முத்துசாமி, நந்தகுமார், ராஜா, குமுதா, நிவேதா, கலைவாணன் ஆகிய 7 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த குமுதா (37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்லமுத்து, சீனிவாசன், மாரிமுத்து, சின்னசாமி, பழனியப்பன், தங்கமுத்து, குமார் ஆகிய 7 பேர் மீதும் என இருதரப்பை சேர்ந்த 14 பேர் மீது, தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: