தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு, மார்ச் 3:   தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடிகளில், ஆசிரியர்கள் உள்ளிட்ட 13,157 அரசு அலுவலர்கள், 2,415 வாக்குசாவடி நிலை அலுவலர்கள், 1201 காவல்துறை அலுவலர்கள் மற்றும் 1540 முன்னாள் ராணுவத்தினர், ஊர்காவல் படை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முன்னுரிமை அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் பணிகளில் பணியாற்ற உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட இதர சீருடை பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>